யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

472 0

யாழில் பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி போன்ற பாதைகளை பயன்படுத்தும் பயணிகள் நாளைய தினம் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் திருமஞ்சம் வெளிவீதி உலா வருவதாகதெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட வீதிகளில் நாளை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் திருமஞ்சம் வெளிவீதி உலா வரவுள்ளது.இதனால் குறித்த காலப்பகுதியில் பயணிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment