வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கைது

496 0

விசா நடைமுறைகளை அலட்சியம் செய்ததுடன், துஷ்பிரயோகமும் செய்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இத்தாலி மற்றும் ஜேர்மன் நாடுகளைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்தவர்கள். எனினும் முறையான எந்தவித அனுமதியும் பெறாமல், எல்ல பகுதியில் தாம் கொண்டுவந்திருந்த அணிகலன்கள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது குறித்துத் தெரியவந்த குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

விசாரணைகள் நிறைவுற்றதும் இருவரும் நாடு கடத்தப்படுவர் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment