மட்டுவில் வடிசாராயம் காய்ச்சிய இல்லத்தரசி கைது!!!

3536 103

மட்டக்ககளப்பு –  பனிச்சையடிமுன்மாரி கிராமத்தில் சட்டவிரோதமாக வடிசாராயம் காய்ச்சிய  இல்லத்தரசி  ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக் கிராமத்தில் கடமையாற்றும் அரச திணைக்கள உத்தியோகத்த்தர் ஒருவர், குறித்த வீட்டில் இருந்து அதிக புகை வருவதைக் கண்டு சந்தேகம் கொண்டு வீட்டைப் பார்வையிட்டபோது வீட்டின் சமையலறையில்  வடிசாராயம் காய்ச்சப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சந்தேகத்தின் பேரில் பெண்  ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், வடிசாராயம்  உட்பட அதை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a comment