உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள தலை சிறந்த வெதுப்பக உற்பத்தியாளர்களை கொண்ட Masters de la Boulangerieக்கு எதிராக, இலங்கை தமிழ் இளைஞன் இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார்.
ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவரே இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார். அவர் பாரம்பரிய ஐரோப்பிய முறைகளில் தனது நிபுணத்துவத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து மரியதாஸ் கருத்து வெளியிடுகையில் -” நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் மற்றும் சர்வதேச நடுவர்களுக்கு மத்தியில் போட்டியிடுவதென்பது உற்சாகமாக, உள்ளது. சர்வதேச நடுவர்களை வெற்றி கொள்வதென்பது ஒரு வாடிக்கையாளரை வென்றது போலாகும். புதுமையான படைப்புக்களை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். சிறந்த சுவையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக 1995 ஆம் ஆண்டு மரியதாஸ் கனடா சென்றார். டொரொன்டோவில் வாழ்ந்து வருகிறார். கணக்கியல் படிக்கும் போது, அவர் ACE வெதுப்பகத்தில் பகுதி நேர வேலையில் இணைந்தார். மரியதாஸிற்கு வெதுப்பக தொழில் அனுபவம் இல்லாத போதிலும், எண்களை கையாளக்கூடிய திறன் அவரிடம் காணப்பட்டது. வெதுப்பகத்தில் அவரின் திடமான செயற்பாடுகள் காரணமாக சிரேஷ்ட இயக்குநராக தரமுயர்ந்தார். அதன் பின்னர் வெற்றிகரமாக பணியை முன்னெடுத்தவர் 400க்கும் அதிகமான பாண்களை தயாரித்தார்.
தற்போது உலகின் தலை சிறந்த பேக்கர் போட்டின் இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளார்.