சர்வதேச தரப் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலர் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அந்தப் பாடசாலையின் 07ம் ஆண்டு மாணவர்கள் 09 பேர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாக அந்த பாடசாலையின் மாணவர் ஒருவரால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மரிணி டி லிவேரா கூறினார்.
அதன்படி சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாக அதிகாரசபையின் தலைவி கூறினார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் மேலும் கூறினார்.
பாடசாலைகளில் மாணவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் சம்பந்தமான தகவல்களை 1929 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு வழங்க முடியும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மரிணி டி லிவேரா கூறினார்.