ஹெரோயினுடன் ஒருவர் கைது

304 0

ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அவரிடமிருந்து 31கிராம் 960மில்லிகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெஹிவளை ஓபன் வீதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment