காரைக்குடி- தூத்துக்குடி அணிகள் சந்திப்பு

328 0

201609030819025114_Tamil-Nadu-Premier-League-another-match-TUTI-Patriots_SECVPFதமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முன்னதாக நெல்லையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.
முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்ட காரைக்குடி காளை வெற்றிக் கணக்கை தொடங்க போராடும். தூத்துக்குடி அணி உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.

துலீப் கோப்பை போட்டி காரணமாக தூத்துக்குடி அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக கவுசிக் காந்தி கேப்டனாக இருப்பார். முந்தைய லீக் ஆட்டங்களில் ஆடாத அபினவ் முகுந்த் தூத்துக்குடி அணிக்கு திரும்புகிறார்.