கற்குழி குறித்து பேஸ்புக்கில் பதிவேற்றிய மாணவன் அதே குழியில் வீழ்ந்து மரணம்!

336 0

தம்பதெனிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருந்த கல் குழியொன்றில் வீழ்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தம்பதெனிய,  மெதவத்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய லக்க்ஷான் சானக என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும்,  குறித்த மாணவர் கருங்கல் உடைப்பால் ஏற்பட்டிருந்த இந்த கல் குழி தொடர்பில் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை கடந்த தினத்தில் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்தில் காணப்படும் அவதான நிலை தொடர்பில் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்த நிலையில்  துரதிஷ்டவசமாக அவரே அந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அந்தப் பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment