வென்னப்புவ, பொரலஸ்ஸ சந்தியில் குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டர் சைக்கிள் ஒன்றை குத்தகைக்காக எடுத்துச் சென்ற ஒருவர், குத்தகை பணத்தை செலுத்தாததால் குறித்த மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து குறித்த அதிகாரியை இருவர் தாக்கியுள்ளனர்.
அச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அதிகாரியை லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் உல்ஹிட்டியாவ பகுதியை சேர்ந்த 46 வயதானவராவர் என்பதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மாரவில நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.