முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன மோசடி தொடர்பில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.