வளிமண்டலத்தில் தாழமுக்கம் – நாடெங்கிலும் மழையுடனும் கூடிய காலநிலை

337 0

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும்

விசேடமாக கிழக்கு – ஊவா மாகாணங்களிலும், மாத்தளை – பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம். நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment