இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றறை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று காலை சுகாதார அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க உள்ளிட்ட குழுவினரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.