தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்டவர் கைது

289 0

பத்திரிகைகளில் வௌியாகின்ற திருமண விளம்பரங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பாதுக்கை மீப்பே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட நபர் கிதுலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை ஏமாற்றி தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தவிர தங்க மாலைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டுக்கள் பலவற்றுடன் இந்த சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

கைது செய்யப்பட நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் வருகின்றனர்.

Leave a comment