உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – ஊழியர்களுக்கு விடுமுறை

314 0

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது அவசியமாகும். விடுமுறையின் கால எல்லை சேவை தளத்திற்கும் வாக்களிப்பு நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பது அவசியமாகும்.

தொழிலில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக தேர்தல் செயலகம் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள தேர்தலின் போது தொழில் புரியும் ஊழியர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக தமக்குரிய உரிமை மீறப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்கெடுப்பின் போது வாக்களிக்க உரிமையுள்ள தமது ஊழியர்களுக்கு சட்டத்தின் கீழ் உரிமையுள்ள விடுமுறையை தனியார் மற்றும் அரசாங்க தொழிற்துறையிலுள்ள ஊழியருக்கு வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

84 அ(1) இக்கட்டளை சட்டத்தின் கீழ் தேர்தலில் வாக்களிப்பதற்கு உரித்துடைய ஆளொருவரை வேலைக்கமர்த்தியவராக இருக்கின்ற எவரும் அத்ககைய ஆளினால் அதற்காக எழுத்து மூலம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் அத்தகைய நபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக வேலைக்கு அமர்தியவர் அவருக்கு போதியதென கருத கூடிய தொடர்ச்சியான காலத்திற்கு அதாவது இரண்டு மணித்தியாலத்திற்கு குறையாததாக இருத்தல் வேண்டும்.

சம்பள இழப்பை ஏற்படுத்தாத விடுமுறையை ஊழியருக்க வழங்க வேண்டும். இந்த பிரிவின் ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது அவ்ஏற்பாடுகளுக்கு இணங்க தவறுகின்ற எவரும் தவறோன்றுக்கு குற்றவாளி ஆவதுடன் நீதவான் ஒருவரினால் சுருக்க முறை விளக்கத்தின் பின்னர் தீர்ப்பளிக்கப்படுமிடத்து 500 ரூபாவுக்கு மேற்படாத தண்டபணத்திற்கு அல்லது ஒருமாத காலத்திற்கு மேற்படாத காலத்திற்கான இரு வகையில் ஒருவகை சிறைதண்டனைக்கு அல்லது தண்டப்பணம் சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளகா வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரி எழுத்து மூலம் விண்ணப்பிக்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் வேலைகொள்வோருக்கும் விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு விடுமுறை வழங்கும் காலம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக கருதப்பட வேண்டும்.

அந்த விடுமுறை காலத்தை ஊழியர் தொழில் புரியும் இடத்தில் இருந்து அவரது வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவும் அங்கிருந்து திரும்பி வரவுள்ள தூரத்தை கருத்தில் கொண்டு வேலைக்கொள்வோர் தீர்மானிக்க வேண்டும். என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment