எதிர்கட்சியின் குரலுக்கு ஆளும்கட்சி செவி சாய்ப்பதில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாவது: சிறுவாணி ஆற்றில் கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து தி.மு.க., தொடர்ந்து போராடும். தி.மு.க., நடத்தும் போராட்டம், கேரள அரசை மட்டுமன்றி மத்திய அரசையும் செவி சாய்க்க வைக்கும். எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்காத சத்தற்ற அரசாக ஆளும் கட்சி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.