தற்போதைய கூட்டரசாங்கம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கதுருவெலவில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
இருபெரும் கட்சிகளினதும் கூட்டிணைப்பு ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடைந்துள்ளதனால், 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக அமைச்சர்களின் எண்ணிக்கை உட்பட பல மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றது.
ஜனாதிபதியும் கூட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பை பொதுக் கூட்டமொன்றின் போது விடுத்திருந்தார்.