தென்கொரியாவுடனான சமாதான நிகழ்ச்சி ரத்து: வட கொரியா அதிபர் அறிவிப்பு

281 0

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. 

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தென்கொரியாவின் யியோங்சங் நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க வடகொரிய அணியை அனுப்ப பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, வடகொரியா – தென்கொரியா எல்லையில் உள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் இரு நாட்டு உயரதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 550 பேர் கொண்ட குழுவை அனுப்பிவைக்க வடகொரியா சம்மதம் தெரிவித்திருந்தது.

மேலும், ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில், என்னை தவறாக விமர்சித்து தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வருவதன் காரணமாகவே இந்த முடிவெடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Leave a comment