முதலமைச்சர் வீட்டில் விவசாயிகள் தஞ்சம் புகும் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்

266 0

காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி தமிழக முதலமைச்சர் வீட்டில் விவசாயிகள் தஞ்சம் புகும் போராட்டம் நடத்தப்படும் என திருவாரூரில், பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழக முதலமைச்சர் வீட்டில் விவசாயிகள் தஞ்சம் புகும் போராட்டம் நடத்தப்படும் என திருவாரூரில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனியில் நாளை(அதாவது இன்று) முல்லை பெரியாறு அணை உரிமை காப்போம் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். போலீசார் அனுமதி தராவிட்டால் தேனி-கேரளா சாலையில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. கருகும் சம்பா பயிரை காப்பாற்றிடவும், இதனால் ஏற்படும் அதிர்ச்சி மரணங்களை தடுத்திடவும் தமிழக முதலமைச்சர், அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்தித்து கர்நாடகாவில் இருந்து உரிய நீரை தமிழகத்திற்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம்(பிப்ரவரி) 6-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் விவசாயிகள் தஞ்சம் புகும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment