ஊவா முதலமைச்சருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

270 0

பதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயகவை எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல, மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க மற்றும் ஊவா மாகாண சபையின் இரு ஊழியர்கள் ஆகியோர் கடந்த 25ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment