மலையகத்தில் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்

270 0

மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான வைத்திய சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக இன்று(30) காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை வைத்தியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்தவகையில் சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்பட்டதுடன் ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.

வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடதக்கது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக வைத்திய சங்கங்கள் தெரிவித்துள்ளன

Leave a comment