தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கோரிக்கை (காணொளி)

588 0

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, போதைவஸ்து மற்றும் பாரிய குற்றச்செயல்களை செய்தவர்களுடன் அடைத்து வைக்காது, அவர்களை பிறிதொரு சிறைக்கூடத்தில் அடைக்க வேண்டும் எனவும், நீண்ட காலமாக சிறையில உள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் அரசியல் கைதிகளின் பெற்றோர் நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment