தென்சீனக் கடல் பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மதித்து நடக்குமாறும் சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் காட்ட வேண்டாம் என்றும் சீனாவுக்கு ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.
தென்சீனக் கடல் பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மதித்து நடக்குமாறும் சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் காட்ட வேண்டாம் என்றும் சீனாவுக்கு ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா, ’பெரிய நாடு என்ற முறையில் சீனா பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். தென்சீனக் கடல் போன்ற பிரச்சனைகளுக்காக சிறிய நாடுகளிடம் தனது தோள் வலிமையை காட்ட கூடாது.
ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட்டு விட்டால் அதன்படி நடக்க வேண்டும். மாறாக, பிலிப்பைன்ஸ், வியட்நாமை விட நாம் பெரிய நாடு என்ற நினைப்பில் தனது சக்தியை காட்ட முயற்சிக்க கூடாது. யாராக இருந்தாலும் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.