பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள தாவே நகரில் இரவு நேர சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற இடத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ கூறுகையில், குண்டு வெடிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். நாட்டு மக்கள் அமைதியாக ஒற்றுமையாக இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.