முன்னாள் போராளிகளுக்கு வடக்கு வைத்திய சாலைகளில் மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பம்

289 0

injection-re-600தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முதல் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று மட்டும் சுமார் 10 முன்னால் போராளிகள் வந்து தமக்கான மருத்துவ பரிசோதணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்த பின்னர் புணர்வாழ்வுக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் பலர் உயிரிளந்துள்ளனர்.
இவ் உயிரிளப்புகளுக்கு தடுப்பு முகாங்களில் வைத்து அவர்களுக்கு ஊற்றப்பட்ட விச ஊசிகளே காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு வடமாகாண சபையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள போதனா வைத்திய சாலைகளில் மருத்துவ பரிசோதனை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று வடமாகாணத்தில் உள்ள 5 வைத்திய சாலைகளிலும் இப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப் பரிசோதனைகளுக்காக வருகைதந்த முன்னாள் போராளிகளுக்கு முதலில் வைத்தியர்களின் ஆலேசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அவர்களுக்கு ஏற்ற வகையிலான ஆரம்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டும் என்றும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.