பின்லாந்து நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாலி நினிஸ்டோ அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகிறார்.
பின்லாந்து நாட்டின் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சாலி
நினிஸ்டோவும், எதிர் கட்சியான கிரீன்ஸ் கட்சி சார்பில் பெக்கா ஹாவிஸ்மோவும் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்தது. மொத்தம் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சாலி நினிஸ்டோ 62.1 சதவீதம் வாக்குகள் பெற்று அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட கிரீன்ஸ் கட்சியின் பெக்கா ஹாவிஸ்மோ 13.1 சதவீத வாக்குகள் பெற்றார். இதையடுத்து, சாலி நினிஸ்டோ மீண்டும் அதிபராகிறார்.
இந்த வெற்றி குறித்து அதிபர் நினிஸ்டோ செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தளவு பெரும்பான்மை வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற கடுமையாக உழைக்க முடிவுசெய்துள்ளேன். எனது வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.