‘ஸ்மார்ட் கார்டு’ இல்லாதவர்களுக்கும் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்

251 0

ஸ்மார்ட் கார்டு” இல்லாதவர்களுக்கும் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூரில் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் புதிதாக “ஸ்மார்ட் கார்டு” வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 1 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட வேண்டும். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும்.
ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கும் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். காவிரி நீரை பெற்றுதர அரசு தொடர்ந்து நட வடிக்கை எடுத்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு பருவத்தில் 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Leave a comment