பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று நாளை(29) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை 9.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ள இவ்விசேட கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.