கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை!

377 0

1472809716-9156மூன்றாவதும் பெண் குழந்தை என்று கூறிய ஜோதிடரின் பேச்சைக் கேட்டு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் ஆசிட் வீசி தாக்கிய மாமியாரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் கிரிஜா (27). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில், அவர் மூன்றாவது சிசுவையும் வயிற்றில் சுமந்துள்ளார்.

மூன்றாவது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்பதை அறிந்துக்கொள்ள, கிரிஜாவின் மாமியார் மற்றும் நாத்தனார் ஒரு ஜோதிடரை அணுகியுள்ளனர்.

கிரிஜா வயிற்றில் சுமப்பது பெண் குழந்தை என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

கிரிஜா, மூன்றாவதும் பெண் குழந்தையை தான் சுமக்கிறால் என்பதை மாமியார் மற்றும் நாத்தனாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆத்திரத்தில், அவர்கள், கிரிஜாவின் வயிற்றில், ஆசிட் வீசி தாக்கியுள்ளனர்.

இதை அடுத்து, அக்கம்பத்தினர் கிரிஜாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உடலில், 30 சவிகிதம் காயமடைந்த நிலையில் கிரிஜா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஆகஸ்ட் 19ஆம் திகதி நடந்த இந்த சம்பவம், தற்போது தான் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கிரிஜாவின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்துள்ளனர்.

தலைமறைவான மாமியார் மற்றும் நாத்தனாரை தேடிவருகின்றனர்