இலங்கை மத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் சம்பந்தப்படுகின்றார்களா எனக் கண்டறிய நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை நாளை (29) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பனவின் தலைமையிலான குழு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.
கடந்த 17 ஆம் திகதி சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.