செக் குடியரசு அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மிலோஸ் ஸீமான் 52 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தற்போதைய அதிபர் மிலோஸ் ஸீமான் 52 சதவிகித வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட த்ராஹோஸ்-சை வீழ்த்தி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் அந்ரேஜ் பாபிஸ் தலைமையிலான அரசு பெரும்பான்மை இல்லாமல் பாராளுமன்ற ஓட்டெடுப்பில் தோல்வியடைந்த நிலையில், மிலோஸ் ஸீமான் மீண்டும் பாபிஸை பிரதமராக நியமிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிலோஸை எதிர்த்து போட்டியிட்ட த்ராஹோஸ் போதிய அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பதால் எதிர்ப்பார்த்த வாக்குகளை பெற முடியாமல் போனதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.