மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும்- துரைராஜசிங்கம்(காணொளி)

463 0

மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும் என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மாற்றுத் தமிழ்க் கட்சிகளாக இருக்கின்றவர்கள் கௌரவம் பார்க்காமல் ஒன்றுபட்டு இருப்பதன் மூலம் இந்த நாட்டின் அரசிற்கு தமிழர்களின் ஒற்றுமையின் செய்தி தெரிவிக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

பழைய நீதிபதிகள் இன்றும் பழையனவற்றையே கூறிவருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு கூழாவடி, மாமாங்கம், மாரபுரம், புன்னைச்சோலை, மட்டிக்கழி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 07ஆம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புஸ்பராஜா ரூபராஜின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

கூழாவடி 09 ஆம் குறுக்கு வீதியில் திறந்துவைக்கப்பட்ட இந்த தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி தலைவரும் வேட்பாளருமான கி.தவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment