நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்திலும் இன்று இரவு வேளையில் மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.