கூட்டரசாங்கம் என்பதன் கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் என்பதல்ல எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்லவில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
சரியாக சொல்வதாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சிதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கழுத்தில் தொங்கியது. இந்த அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடாத்தப்பட்ட பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.