பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றை கூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெனியாயவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆணைக்குழு அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்றிரவு சபாநாயகரை தாம் சந்தித்து, பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டடுமாறு கூறியுதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.