பாக்குநீரிணையில் கடல்தொழிலை மேற்கொள்வதில் பிரச்சினை – இந்திய மீனவர்கள்

450 0

201511020347298897_In-foreign-prisons-651-Indian-fishermen_SECVPF.gifஇந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அண்மையில் தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், பாக்குநீரிணையில் கடற்தொழிலை மேற்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக இந்திய மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து 11 மீனவ சங்கங்கள், நேற்று முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்கங்களின் தலைவர் பீ. சேசு ராஜா தெரிவித்துள்ளார்.

மீனவ சங்கங்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்று எட்டப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கோடி ரூபா பெறுமதியான 113 படகுகளை விடுவிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மீனவ சங்கத்தின் தலைவர் கோரியுள்ளார்.