மொஹமட் சுலைமான் படுகொலை – சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

354 0

bam9-1பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்களை இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதாகும்.

பம்பலபிட்டியவை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.

நேற்றைய தினம் சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் மற்றும் மேலும் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகரை கடத்த பயன்படுத்தப்பட்ட சிற்றூர்தி ஒன்றும் இன்றைய தினம் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்து காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகரை தாக்கியதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதம் மற்றும் அவருடைய கையடக்க தொலைபேசியும், காவற்துறை குற்றத்தடுப்பு தடுப்பு பிரிவின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.