தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசில் அங்கம் வகிக்கிப்பதோடு தமிழர்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்காமல் பதிவிகளையும் சலுகைகளையுமே பெற்றுவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்து அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து மாற்றுத் தலைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
“அரசு சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்ற சிறப்பு நிதியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15பாராளுமன்ற உறுப்பினர்களும் 2கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளனர் அதே போல் கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அரசு சார்பில் வகித்த அதே பதவியை செல்வம் அடைக்கலநாதன் வகிக்கிறார் ஆகவே தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வை எதிர்கட்சியாக இருந்து முன்னெடுக்காமல் அரசுடன் இணைந்து சலுகைகளை பெற்றுவருகிறது எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கும் கூட்டமைப்பிற்கும் வழங்குகின்ற வாக்கும் ஒன்று தான் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்கடிக்க ஏனைய அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு மாற்று தலைமையை உருவாக்க வேண்டும் இணைந்து செயற்பட நான் தயாராக உள்ளேன். இதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்திகொண்டுள்ள கட்சிகளுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்” – என்றார்.