5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் : தொலை­பேசி அழைப்­புகள் பகுப்­பாய்வு

248 0

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் தொலை­பேசி அழைப்­புக்­களை பகுப்­பாய்வு செய்யும் நட­வ­டி­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தாக குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு நேற்று நீதி­மன்­றத்­துக்கு அறி­வித்­தது. கடத்தல், கப்பம் கோரல் தொடர்பில் இதன்­போது பல தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதிவான் லங்கா  ஜய­ரத்­ன­வுக்கு அறி­வித்தார்.

அதன்­படி இந்த விவ­கா­ரத்தில் இது­வரை கைது செய்­யப்­பட்ட 9 பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள காமினி, மெண்டிஸ் ஆகிய இரு முன்னாள் கடற்­படை புல­னாய்­வா­ளர்­க­ளையும் எதிர்­வரும் எட்டாம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இதன்­போது மன்­றுக்கு விசா­ர­ணை­களை தெளி­வு­ப­டுத்­திய பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, விசா­ர­ணை­களை மிக விரைவில் நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தா­கவும், தற்­போது கடத்தல், கப்பம்  கோரியோர் தொடர்பில் மேலும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்த அடை­யாளம் காணப்­பட்ட தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய விசேட பகுப்­பாய்­வுகள் இடம்­பெ­று­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

கடற்­படை புல­னா­ய்வுப் பிரிவின் முன்னாள் வீர­ரான கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோரின் விளக்கமறியலை நீடித்த நீதிவான் வழ க்கை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a comment