இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

255 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இருநாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், டொனால்ட் டிரம்ப் இங்கிலாந்தில் எந்த மாதம், எந்த தேதியில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த நவம்பரில் ஆசிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment