தென்கொரியாவின் மிர்யாங் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உள்பட 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்கொரியாவின் மிர்யாங் நகரில் உள்ள சேஜாங் மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதய நோய் சிகிச்சை அறையில் இருந்து பற்றிய தீயானது மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு 200 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.