திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழக மக்கள் துன்பத்தில் உள்ளனர். இவர் கெட்டவர் என்று அவர்களுக்கும், அவர் கெட்டவர் எனக்கூறி இவர்களுக்கும் என இரு கட்சிகளுக்கும் மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டதால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். அவர்களை காப்பாற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், நகரத் தலைவர் பஞ்சநாதன் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.