முல்லைத்தீவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது

352 0

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று பகல் 12.00 மணியளவில் புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 288 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் மற்றும் தபாற்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 58 மற்றும் 40 வயதுடைய, தேராவில் மற்றும் விஷ்வமடு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment