2017ல் தேயிலை உற்பத்தி 5 வீதத்தால் உயர்வு

261 0

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத்தொழிற்துறைக்கு வழங்கிய நிவாரண உதவிகள், பரந்துபட்ட சேவை மற்றும் தேயிலை உற்பத்திக்கான சிறந்த காலநிலை என்பனவாகும் என்பதை அமைச்சு சுட்டிக்காட்டியது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்கவின் தலைமையில் தேயிலை ஏற்றுமதியின் தற்போதைய நிலமை குறித்தும் தேயிலை தொழில்துறையின் தற்போதைய நிலைமை குறித்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment