திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு அத்தியாவசிய உணவுப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் கொள்கலனே மா மூடைகளை ஏற்றிச் சென்ற போது இவ்வாறு திடீரென தீப்பற்றியுள்ளது.
திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு சென்ற போதே கந்தளாய், பொட்டகாடு, எரிக்கிளம் காட்டுப்பகுதியில் வைத்து கொள்கலன் பெட்டி வாய்க்காலுக்குள் தலை கீழாக குடைசாய்ந்ததோடு ,கொள்கலன் தீப்பற்றியது. உடனே அப்பிரதேச பொதுமக்கள் கந்தளாய் பொலிஸாருக்கும், பொலிஸ் அவசர பிரிவினருக்கும் தகவல் வழங்கியதுடன் தீப்பிடித்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இயந்திரக் கோளாறு வாகனம் காரணமாகவே இவ்வாறு தீப்பிடித்திருக்கலாம் எனவும் கந்தளாய் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.