மீன் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் கவனம்

285 0

இலங்கையிலிருந்து மீன் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தேசிய மீனவர்களை பாதுகாப்பதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மீன் இறக்குமதி குறைக்கப்படவுள்ளதோடு ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்வதற்கும், அவர்களுக்கான தண்டப்பணத்தினை அதிகரிக்கவும், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2016 அம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017 ஆம் ஆண்டில் மீன் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீன்பிடி வலையங்களை அமைக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, 12 வாவிகள் காணப்படுவதாகவும், அதில் 10 வாவிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Leave a comment