கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

248 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a comment