நீதி கோட்ட பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி

257 0

கண்ணகி மற்றும் காளி தெய்வங்களின் படங்களை வைத்து பூஜை செய்து வித்தியாசமான முறையில் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளார் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி சந்தியா.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று காலை குறித்த போராட்டத்தினை மிகவும் அமைதியான முறையில் இன்னும் சிலருடன் மேற்கொண்டுள்ளார்.

பலவருடங்களுக்கு முன்னார் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரிடம் நீதிகேட்டு கிடைக்காத பட்சத்தில் இன்று நீதி தேவதையிடம் அமைதியான முறையில் பூஜையில் ஈடுபட்டு வாழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment