இலங்கை மருத்துவ சபைக்கு 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.
குறித்த தேர்தலுக்கு 13 மருத்துவர்கள் போட்டியிட்டிருந்ததுடன், அதில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் நான்கு பேர் அதிக வாக்குகளால் இலங்கை மருத்துவ சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி டாக்கடர் அநுருத்த பாதெனிய 6254 வாக்குகளைப் பெற்று இலங்கை மருத்துவ சபைக்கு தெரிவாகியுள்ளார்.
அதேவேளை வைத்தியர் நலிந்த ஜேரத் 5676 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், வைத்தியர் ஹரிஸ் பதிரகே 5250 வாக்குகளைப் பெற்றுளார்.
வைத்தியர் நவீன் டி சொய்சா 5117 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த நான்கு வேட்பாளர்களும் இலங்கை மருத்துவ சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா கூறினார்.