அமைச்சர் ஹக்கீமின் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை

238 0

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் 16ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை செய்லான் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த வாகானம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

ரஹ்மத் மன்சூரின் சொந்த வாகனமான மொண்டிரோ ஜீப், குறித்த வீதியில் அமைந்துள்ள அவரது சாரதியின் வீட்டுக்கு அருகிலுள்ள நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தீயிடப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வரான ரஹ்மத் மன்சூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment