பொதுஜன பெரமுன வேட்பாளர் மீது தாக்குதல்; இ.தொ.க ஆதரவாளர்கள் கைது

246 0

அக்கரப்பத்தனை வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் எஸ்.ராஜ்குமார் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

செல்வராஜ் ராஜ்குமார் என்பவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மூவரால் நேற்று (24) மாலை டயகம கொலனி பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் டயகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று (24) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யபட்ட இருவரும் இன்று (25) வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment